10 January 2025


சம்பள அதிகரிப்பு குறித்து விசேட கவனம்



எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
(colombotimes.lk)