09 January 2025


பேருந்து நடத்துனர்களுக்கு புதிய சட்டம்



இனிவரும் காலங்களில் பேருந்து நடத்துனர்கள் மிதிப்பலகையில் பயணிக்க  முடியாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

மிதிப்பலகையில் பயணம் செய்யும் நடத்துனர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளை இயக்குவதில் உள்ள போட்டியால், சில நடத்துனர்கள் ஆபத்தை பொருட்படுத்தாமல் மிதிப்பலகையில் பயணிப்பதாக புகார் எழுந்துள்ளது.

 
(colombotimes.lk)