இந்நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 40 திட்டங்கள் தொடர்பாக மேற்படி குழு மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அதன் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய அறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானத்தின் பிரகாரம் அது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மின்சார சட்டத்தின் பிரகாரம், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் இரத்து செய்யப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.
(colombotimes.lk)