கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய பெஞ்ச் வழங்கிய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்காக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 05 பேரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தண்டனைக்கு எதிராக பிரதிவாதிகள் முன்வைத்த மேன்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே பிரதிவாதிகளுக்கு அறிவித்துள்ளார்.
(colombotimes.lk)