27 December 2024


நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்



நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று (05)  மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும் என்றும்  அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

(colombotimes.lk)