2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கு அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால நியமக் கணக்கு இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்றும் (05) நாளையும் (06) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் 4 மாதங்களுக்கு தற்போது இயங்கி வரும் திட்டங்கள் மற்றும் அரசு சேவைகளை இயக்க தேவையான பணம் ஒதுக்கப்படவுள்ளது.
இடைக்கால கணக்கறிக்கை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(colombotimes.lk)