ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்கியமைக்காகவும், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு கடன்களை வழங்கியமைக்காகவும் சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவர் கிங் போயோங்கை ஜனாதிபதி சந்தித்தவேளையில்
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட தாம் நம்புவதாக கிங் பாயோங் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
(colombotimes.lk)