வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (19) வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட 18 பேர் இந்த ஜனாதிபதி செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
(colombotimes.lk)