முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை விளக்கி நேற்று (19) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறையை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், 2022 ஜூலை 31 ஆம் திகதி வரை 7,000 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தில் பல்வேறு கொடுப்பனவுகள் செய்த போதிலும், செப்டம்பர் 21, 2024 க்குள் 11,000 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் இருப்புத் தொகையை பராமரிக்க அவர்கள் உழைத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுகளுக்காக 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிஹ் மேலும் தெரிவித்துள்ளார்