22 December 2024


புலமைப்பரிசில் பரீட்சை விசாரணையின் இரகசிய அறிக்கை உச்ச நீதிமன்றத்திற்கு



அண்மையில் நடைபெற்ற 05 வருட புலமைப்பரிசில் பரீட்சை வினா வினாக்களில் 3 வினாக்கள் முன்கூட்டியே வெளிவந்தமை  தொடர்பான விசாரணைகளின் விரிவான இரகசிய அறிக்கை இன்று (19) உச்ச நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான இரகசிய அறிக்கையை இன்று காலை 9.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டது.

புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் 3 வினாக்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சமர்ப்பித்த 4 அடிப்படை உரிமை மனுக்களின் பரீட்சை நேற்றுடன் நிறைவடைந்தது.

இது தொடர்பான மனுக்களை ஆராய்ந்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு எதிர்வரும் 31ஆம் திகதி தனது தீர்ப்பை அறிவிப்பாளர்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது

(colombotimes.lk)