23 December 2024


சைப்ரஸ் சென்ற இலங்கையர்களுக்கு நெருக்கடி



சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வேளையில் கறுத்தது தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

சைப்ரஸில் பணிபுரியும் இந்நாட்டு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து சமூக பாதுகாப்பு நிதியாக பெறப்படும் பணம் அவர்களுக்கு திரும்ப வழங்க முடியாத  நிலை உருவாகியுள்ளது என்றும்
தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)