எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் இன்று (19) பாராளுமன்ற ஹன்சார்ட் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்குவதற்கு சஜித் பிரேமதாசவே ஏற்பாடு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தனது கல்வித் தகைமைகளை நேற்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தனது கல்வித் தகுதி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.