22 December 2024


அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு



அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20) முடிவடையவிருந்தது.

இதேவேளை தனியார் இறக்குமதியாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட 35600 மெற்றிக் தொன் அரிசி இதுவரை நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)