23 December 2024


முன்பள்ளி சிறார்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள உணவு கொடுப்பனவு



2025ஆம் ஆண்டு முதல் ஆரம்பக் குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளிச் சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவை 155,000 குழந்தைகளுக்கு அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(colombotimes.lk)