இலங்கையில் பொலிஸ் வாகனங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளது.
அதன்படி வடமாகாண பொலிஸ் நிலையங்களில் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக கெப் வண்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ள பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
(colombotimes.lk)