24 December 2024


கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட தேர்தல் சட்ட மீறல்கள்



பொதுத் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் 152 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1794 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளன.