மும்பை கடற்பகுதியில் இந்திய கடற்படை படகு ஒன்று பயணிகள் கப்பல் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பயணிகள் கப்பலில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படை கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(colombotimes.lk)