சதொச ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 1500 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவு செய்யப்பட்டதாக லங்கா சதொச தலைவர் டொக்டர் சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சதொச கடைகளின் ஊடாக குறித்த அரிசி இருப்புக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சதொச விற்பனை நிலையங்கள் மூலம் உள்ளூர் அரிசியும் கட்டுப்பாட்டு விலையில் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(colombotimes.lk)